Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

சாம்சங், சிம்கார்டு, மிஸ் கால் என்று பெயர் வைக்கும் விசித்திரக் கிராமம்!


சாம்சங், சிம் கார்டு, ஆண்ட்ராய்டு, ஜியோனி, சிப்..... இவை நம்மை பொறுத்தவரை மொபைல் தொடர்புடைய வார்த்தைகள். ஆனால் ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகளைத் தான் பெயராக சூட்டுகிறார்கள்.
ராஜஸ்தானில் புந்தி என்னும் நகருக்கு அருகே ராம்நகர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காஞ்சர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் மக்கள் தொகை 500 தான். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் படிக்கவில்லை. எனவே தங்கள் பிள்ளைகளின் பெயர்கள் அவர்களைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதால், ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ், பிரதமர் என்னும் பெயர்களை சூட்டுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் 50 வயது பெண்ணுக்கு அவர்களின் மாவட்டக் கலெக்கடர் மீது மரியாதை என்பதால், அவரின் பேரனுக்கு 'கலெக்டர்' என்று பெயர் சூட்டி உள்ளார். இங்கு கொள்ளை, திருட்டு அதிகம். கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கும். தங்கள் பிள்ளைகள் அவ்வாறு வளரக் கூடாது என்பதால் அவர்களுக்கு 'ஐஜி', 'எஸ்.பி.', 'நீதிபதி', என்று பெயர் சூட்டி உள்ளனர்.

தற்போது தொழிநுட்ப ரீதியாக அப்டேட் ஆகியுள்ள கிராம மக்கள் ஆண்ட்ராய்டு, சாம்சங், நோக்கியா, ஜியோனி, சிம் கார்டு, சிப் என்று பெயர் வைக்க தொடங்கிவிட்டனர்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.