Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

ஜனாதிபதி வேட்பாளராக நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை? எல்லாம் மோ.. மயம்!


ஜனாதிபதி பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர், அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமலும் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.

ஜனாதிபதி தேர்தல்
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. அப்பதவிக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணிகளை பாஜக தொடங்கியது.

அத்வானி, ஜோஷி
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

அமிதாப்பச்சன்
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு அடிபட்டது. அதேநேரத்தில் பனாமா நாட்டில் முதலீடு செய்துள்ளோரின் பெயர் பட்டியலில் அமிதாப்பின் பெயர் இருந்ததால் அவருக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது.

ரஜினிகாந்த்
இச்சூழலில்தான் அப்துல்கலாமை தேர்வு செய்து திக்குமுக்காட வைத்த அதே பார்முலாவை கடைபிடிக்க பாஜக முன்வந்துள்ளது. இதனடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரை வேட்பாளராக அறிவிக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருகிறது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.