Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2017

விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி- முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி


விருதுநகரில் புதிய பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நகர மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்துதல், மருத்துவக் கருவிகள் வாங்குதல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள தமிழக அரசு எடுத்து வருகிறது. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், 152 வட்ட மருத்துவமனைகள், 10 வட்டம் சாரா மருத்துவமனைகளில் பல் மருத்துவப் பிரிவு நிறுவப்பட்டு, பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக பல் மருத்துவக் கல்லூரி: தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. தமிழகத்தில் சென்னையைத் தவிர வேறு எங்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில், தென் தமிழகத்தில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி ரூ.50 கோடியில் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், விருதுநகரில் புதிய பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எத்தனை மாணவர்கள்? புதிய கல்லூரியில் 100 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். இந்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கும் கல்லூரி முதல்வர் பதவியை உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.