April 17, 2017
அண்டை மாநிலங்கள் அசுர வளர்ச்சி ! சீரழியும் தமிழகம், ஏமாறும் தமிழன்!
கூலித்தொழிலாளிகள் மட்டுமே இருந்த ஆந்திராவை பில்கேட்ஸை வரவழைத்து ஹைதராபாத்தை ஒரு சிலிகான் வேலி ஆக்கிக் காட்டினார் சந்திரபாபு நாயுடு.
நாயுடு எனக்கு எது கிடைத்தாலும் மக்கள் பணி செய்வேன் என்று அமராவதியை தலைநகராக்கி, நான்கு ஆறுகளை ஒரே வருடத்தில் யாரிடமும் கை ஏந்தாமல் தன் கஜானா பணத்தில் இணைத்து வறண்ட மாவட்டங்களை வளமாக்கி உள்ளார்.
மேலே சொன்ன எந்த மாநிலமும் சைக்கிளோ, மடிக்கணினியோ, இருசக்கர வாகனமோ, கேஸ் அடுப்போ, மின்விசிறி, மிக்ஸி கொடுத்து மக்களிடம் ஆட்சி உரிமையைக் கோரவில்லை.
ஏன் தமிழ்நாடு மட்டும் இத்தனை இலவசங்கள் தருகிறது? 63% வரிப்பணம் இலவச திட்டங்களுக்காம்! பணத்தை விவசாயிக்கு ஏன் செலவிடவில்லை? உள்ளூர் நதிகளை ஏன் இணைக்கவில்லை?
நாளைக்கு குழாயில் தண்ணீர் வராது என்றால் இருக்கும் காலி பாத்திரங்களில் நீர் சேமிக்கும் தமிழனின் அதே புத்தி ஆளும் அரசுக்குத் தோன்றாதது ஏன்?
ஏரி குளங்கள் தூர் வாருவதை விட பொங்கலுக்கு ரெண்டு துண்டு கரும்பை ரேஷன் கடையில் கொடுப்பதை ஏன் பெருமை பீற்றிக் கொண்டார்கள்?
ராஜபக்ஷே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தார். தாய் மண்ணில் தமிழ்நாட்டை, தமிழனை அழித்தது யார்? ஓட்டு போடுவதை ஒரு சமுதாய கடமையாக பார்க்காமல், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் தானே?
நாளை சரித்திரம் சொல்லும்போது குடித்து சீரழிந்த தமிழன் பிணத்தின் மேல் இலவச வேட்டி போர்த்தி, மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் இலவச மின் விசிறி அருகில் பசியோடு குழந்தைகள், இழவை கவனிக்காமல் தட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் இலவச மதிய உணவு உண்டு விட்டு கொள்ளி போட வரும் அவல நாள் தூரத்தில் இல்லை.
எதை நோக்கி எம் தமிழகம் பயணிக்கிறது..?
அண்டை மாநிலங்கள் அசுர வளர்ச்சி ! சீரழியும் தமிழகம், ஏமாறும் தமிழன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.