April 30, 2017
தலித்துகள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்
மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள்.
கடந்த வாரம் சந்தர் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் அந்த கிராமப்பகுதி வழக்கப்படி தலித்துகள் மேளம் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு என்றும், பேண்டு வாத்தியங்கள் உயர் சாதியினருக்கானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
எதிர்ப்புகளை மீறி சந்தர் மேக்வால், மணமகனை வரவேற்க பேண்டு வாத்தியங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக போலீஸ் பாதுகாப்போடு திருமணம் நடத்தியிருக்கிறார். இதனால் மேலும் வெறுப்பு கொண்ட உயர் சாதியினர் அடுத்தடுத்த நாட்களில் தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெய் கொட்டியுள்ளனர்.
இதையறிந்த கலெக்டர் டி வி சிங் மற்றும் எஸ்பி ஆர்.எஸ்.மீனா ஆகியோர் கிணற்றை ஆய்வு செய்து, ஆதிக்க சாதி ஆட்களிடம் பேசி சமாதானப்படுத்தியது மட்டுமின்றி இரண்டு போர்வெல் போட உத்தரவிட்டிருக்கிறார்.
புகைப்படம் - இந்துஸ்தான் டைம்ஸ்
தலித்துகள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.