Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2017

சாக்கு பையில் கட்டி...ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியை அடித்த கொடுமை- பதற வைக்கும் காட்சிகள்



சீனாவில் சாக்கு பைக்குள் சிறுமியை அடைத்து வைத்து அடித்து உதைத்த உறவினர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.
அதில், ஒரு சிறுமி சாக்கு பைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியின் பாட்டி அவரை கால்களால் வேகமாக எட்டி உதைக்கிறார்.
வலியால் துடிக்கும் சிறுமி அழுகிறார், அதன் பின்னர் சிறுமியின் உறவினர் ஒருவர் அவரை கொம்பால் அடிப்பது போல வீடியோவில் உள்ளது.

மேலும், கால்களை உடைத்து விடுவேன் எனவும் அதில் சிறுமியை அவர்கள் மிரட்டுகின்றனர்.
சிறுமி ஒழுக்கமாக நடந்து கொள்ளாததால் அவரை அடித்ததாக இருவரும் கூறியுள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் வேறு நாட்டில் வேலை பார்க்கிறார்கள் எனவும் அவரின் பாட்டியும், உறவு பெண்ணும் தான் சிறுமியை பராமரிக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ பொலிசார் பார்வைக்கு சென்றதையடுத்து இருவரிடமும் பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.