April 30, 2017
சோலி சுத்தம்..! அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூ
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தால் கட்சிக்கு பிரச்சனை என எண்ணிய எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார்கள்.
இதற்கு ஓ.பி.எஸ் அணியும் சம்மதம் தெரிவித்ததால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இரு அணிகளும் இணையும் என எதிர்ப்பார்க்கபட்டது.
பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேரும் நியமிக்கப்பட்டனர்,
ஆனால், ஆரம்பத்தில் இதில் ஆர்வம் காட்டி வந்த எடப்பாடி அணி பின்னர் ஓ.பி.எஸ் அணியை சீண்டி பார்க்க துவங்கியது.
மேலும், எதாவது காரணம் சொல்லி இரு அணிகளின் பேச்சு வார்த்தை நடத்துவது தள்ளி கொண்டே போனது.
இதனிடையில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தாரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.
இதை அவர் பலமுறை வலியுறுத்தியும் சசிகலா மற்றும் குடும்பத்தார் கட்சியிலிருந்து நீக்கபடாததால் ஓ.பி.எஸ் அணி அதிருப்தி அடைந்தது.
இதனிடையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் அணி ஆதரவு எம்.எல்.ஏ செம்மலை, எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
தற்போது ஓ.பி.எஸ் வீட்டில் இது குறித்து ஆலோசனை நடத்தபட்டு வருகிறது.
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்பபடி எடப்பாடி அணியுடன் இணைய மாட்டோம் என ஓ.பி.எஸ் சற்று நேரத்தில் அறிவிப்பார் என கூறப்படுகிறது
சோலி சுத்தம்..! அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூ
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.