Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2017

ஐசிஐசிஐயைத் தொடர்ந்து ஏடிஎம் மிஷின்களில் தமிழை நீக்கியது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா!


ஏடிஎம் மிஷின்களில் பரிவர்த்தனைக்கான தமிழ் மொழியை மத்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏடிஎம் மிஷின்களில் பரிவர்த்தனைக்கான தமிழ் மொழியை மத்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வருகின்றன.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் ஒரு சில ஏடிஎம்களில் தமிழ் மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏடிஎம் மிஷின்களில் பணப் பரிவத்தனைக்காக தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சேவை அளிக்கப்பட்டது.

ஆங்கிலத்தால் சிரமப்படுவோர் பயனடையும் வகையில் தமிழ் மொழி ஏடிஎம் மெஷின்களில் இருந்தது. அண்மையில் ஐசிஐசிஐ வங்கி தனது ஏடிஎம் மெஷின்களில் தமிழ் மொழி சேவையை நீக்கியது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயும் தனது ஒரு சில ஏடிஎம் மெஷின்களில் இருந்து தமிழ் மொழியை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக இந்தி மொழியை சேர்த்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள மைல் கல்களில் இந்தி மொழியில் பெயர்கள் எழுதப்பட்டு இந்தி திணிக்கப்படுவதற்கு தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியில் எழுதப்படும் பெயர்களையும் கருப்பு மை மூலம் அழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.