April 27, 2017
தினகரனின் அடியாள் ஜெயா டிவி ஜனாவிடம் சிக்கி பாடாய்பட்ட ஹீரோயின்கள்... அதிரும் லீலைகள்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனுடன் சிக்கியுள்ள ஜெயா டிவி ஜனா அரங்கேற்றிய லீலைகள் அதிரவைக்கின்றன.
டிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜெயா டிவி ஜனா, தமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது கோடம்பாக்கம்.
தினகரனின் 'ஆல் இன் ஆல்' ஜெயா டிவி ஜனாவின் பெயரை கேட்டாலே கோடம்பாக்கம் அதிர்ந்து போகும்... அப்படித்தான் சினிமா வட்டாரங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் ஜனா. அந்த கொடுமையான காலங்களை சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தற்போதைய அரசியல் நடிகைக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இப்போது நினைத்தாலும் ஷாக் ஆகிடுவார். முகத்தில் ஆசிட் வீசிடுவோம் என அப்போது கோலோச்சிய கும்பலின் மிரட்டல் அந்த அரசியல் நடிகையின் இரவு தூக்கங்களை பலி கொண்டது.
ஜெர்க் ஆகும் சி நடிகைகள்
இதே நிலைமையைத்தான் 2000-மாவது ஆண்டுகளில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோயின்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். 'சி' பெயருள்ள ஹீரோயின்கள் ஜனாவின் பெயரைக் கேட்டாலே 'ஜெர்க்' ஆவார்கள். அந்த அளவுக்கு 'முதலாளிகளுக்கும்' 'நடிகைகளுக்கும்' பாலமாக இருந்தவர் ஜனா.
ஜாக்பாட் நமீதா
ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு பிக்ஸ் செய்யப்பட்டவர் நடிகை நமீதா.
நமீதாவுக்கு தமிழ் வகுப்பு
இதில் முக்கிய பங்கு ஜனாவுக்கு உண்டு. நமீதாவை ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக புக் செய்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து... என கூடவே இருந்தார் ஜனா.
இந்திரா நாயகி
அடுத்து இந்திரா படத்தின் நாயகி ஜெயா டிவியில் நடத்திவந்த நிகழ்ச்சியை தடாலடியாக நிறுத்தியவர் ஜனா. அவருக்குப் பதிலாக தனக்கு வேண்டப்பட்ட நடிகையை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க முயற்சித்தார்.
போயஸில் பஞ்சாயத்து
இந்த விவகாரம் ஜெயா டிவியில் பெரும் புயலையே உருவாக்கிவிட்டது. இதற்கான பஞ்சாயத்து போயஸ் கார்டனில் நடந்ததும் தனிக்கதையே.
ஜஸ்ட் சாம்பிள்தான்...
ஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஜனாவின் போன் கால் வந்தாலே உதறலெடுத்து விடும்.. இவையெல்லாம் சும்மா ஜஸ்ட் ஜனாவின் சாம்பிள்தான் என கண்சிமிட்டுகிறது கோடம்பாக்க வட்டாரம்.
தினகரனின் அடியாள் ஜெயா டிவி ஜனாவிடம் சிக்கி பாடாய்பட்ட ஹீரோயின்கள்... அதிரும் லீலைகள்
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.