Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2017

சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் முட்டை: மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியச் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கறிஞர் சுக்ரிவா துபே மூலமாக டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் நேற்று பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் ஏராளமாக இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெருநகரங்களில்தான் இத்தகைய கலப்பட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோன்ற பொருட்களை சேமித்து வைத்துள்ள இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்.

பொதுமக்களின் ஆரோக்கியத் தைப் பாதுகாக்க அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது முக்கியம்.

இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மத்திய அரசு தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ரசாயன கலவைகள் மூலம் செயற்கை கோஸ் தயாரிப்பது பற்றிய வீடியோவும் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது பற்றிய வீடியோவும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.