April 1, 2017
எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை... அடித்து சொல்லும் ஓபிஎஸ்!
தனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக தங்களை இயக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது குறித்து தற்போதைய அரசுதான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஓபிஎஸ் கூறினார்.
பாஜக எங்களை இயக்குகிறது என கூறுவது பொய். பாஜக எங்களை இயக்கவில்லை, இடைத்தேர்லில் பாஜகவும் தான் போட்டியிடுகிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை... அடித்து சொல்லும் ஓபிஎஸ்!
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.