April 1, 2017
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண் தண்டனை.. மத்திய பிரதேசத்தில் புதிய சட்டம்
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய பிரதேச அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை போலீஸ் அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடுத்து நாட்டில் சட்டம்-ஒழுங்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதில் காவல்துறைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது.
பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. காவல்துறையில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்கள், எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சுதந்திரமாக செல்லும் சூழ்நிலையை காவல்துறை உருவாக்க வேண்டும் என்றார்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண் தண்டனை.. மத்திய பிரதேசத்தில் புதிய சட்டம்
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.