April 12, 2017
கணவன் அழகாக இல்லாததால் திருமணமான 9வது நாளில் குழவியை கணவன் தலையில் போட்டு கொடூர கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை வாள்கார தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ரமேஷ்(29), சிற்பி. இவரது மனைவி விஜி(18). இருவருக்கும் கடந்த 2ம் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தாலிபிரித்து கட்டும் நிகழ்ச்சிக்காக இருவரும் விஜியின் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினர். ரமேஷ் வந்தவுடன் உறங்கியதாக தெரிகிறது. மாலையில் திடீரென ரமேஷ் அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது மனைவி விஜி கதறியபடி வீட்டின் வெளியே வந்து தனது கணவரை மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து கொலை செய்ததாக கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் திரண்டனர். தகவலறிந்த போலீசார் வந்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார், ரமேஷின் மனைவி விஜி மற்றும் தங்கை ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன் கணவரை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக விஜி அளித்த வாக்குமூலம்:
நான் அழகாக இருப்பதால் அழகான மாப்பிள்ளையைதான் திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் எனது குடும்பத்தினர் ரமேஷை திருமணம் செய்து வைத்தனர். இது பிடிக்காததால் திருமணமான நாள் முதல் அம்மா வீட்டிலேயே இருந்தேன். நேற்று முன்தினம் நடந்த தாலிபிரித்து கட்டும் நிகழ்ச்சிக்கு ரமேஷ் வந்தார். அவரை பார்த்தாலே அருவருப்பாக இருந்தது. தாலி பிரித்து கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் திருவதிகை வீட்டுக்கு வந்தோம். ரமேஷ் என்னிடம் வந்து ஆசை வார்த்தைகளால் பேசினார். எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் என்னை தாக்கினார். நானும் திரும்ப தாக்கினேன். பின்னர் தூங்கிய அவர் தலையில் கிரைண்டர் குழவி கல்லை எடுத்து தாக்கி கொன்றேன், இவ்வாறு கூறியுள்ளார்.
கணவன் அழகாக இல்லாததால் திருமணமான 9வது நாளில் குழவியை கணவன் தலையில் போட்டு கொடூர கொலை
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.