April 23, 2017
முறுக்கு கம்பி விலை டன்னுக்கு 8 ஆயிரம் வரை எகிறியது
தமிழகம் முழுவதும் சுமார் 100 டிஎம்டி முறுக்கு கம்பிகள் எனப்படும் கான்கிரீட் கட்டிட பணிக்கான ஸ்டீல் கம்பிகளின் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நிலக்கரியை பயன்படுத்தியே இரும்பை உருக்கி கம்பியாக வடிவமைக்கப்படுகிறது. தற்போது, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முருக்கு கம்பிகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு டன்னுக்கு 8 ஆயிரம் வரை ஸ்டீல் கம்பியின் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஸ்டீல் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி கூறியதாவது: அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் நிலக்கரி தேவை அதிகரிப்பால், நிலக்கரி விலை ஒரு டன்னுக்கு 5 ஆயிரம் வரை விலை உயர்ந்து விட்டது. இரும்பு உருக்குவதற்கான மூலப்பொருளான நிலக்கரி தட்டுப்பாடால் கடந்த ஒரு மாதத்தில் ஒரு டன் ஸ்டீல் கம்பியின் விலை 8 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. முன்பு ஒரு டன் 36 முதல் 37 ஆயிரமாக இருந்த ஸ்டீல் கம்பியின் விலை தற்போது 45 ஆயிரமாக உயர்ந்து விட்டது என்றார்.
முறுக்கு கம்பி விலை டன்னுக்கு 8 ஆயிரம் வரை எகிறியது
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.