April 22, 2017
மோடி டீ விற்ற ஸ்டேஷனுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடி டீ விற்பனை செய்த ரயில்வே ஸ்டேஷன், எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன். இங்குள்ள டீ கடையில், தன் சிறு வயதில் தந்தையுடன் டீ விற்பனை செய்து வந்ததாக, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டார். இந்த ரயில்வே ஸ்டேஷன் தற்போது மேம்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், '' இதற்காக, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாத்நகர் - மேக்சானா ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. வாத்நகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளை, சுற்றுலா தலங்களாக தரம் உயர்த்த, 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தான், வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்படுகிறது,'' என்றார்.
மோடி டீ விற்ற ஸ்டேஷனுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.