Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2017

கருணாநிதியின் வைர விழா: பிரமாண்ட ஏற்பாடு! 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு!


கருணாநிதியின் வைர விழாவை யாரும் எதிர்பார்த்திராத வகையில் பிரமாண்டமாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் அவர் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது.
கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே ஆவார்.

 எம்.எல்.ஏ-வாகத் தேர்வானதன் வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. தி.மு.க செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரமாண்டமாக நடத்த வேண்டும்
அப்போது பேசிய ஸ்டாலின், "திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மாநகரம், நகர அளவிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்த வேண்டும்.

வைரவிழா கருத்தரங்கம்
ஜூன் முதல் வாரத்தில் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைரவிழா கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்து நடத்துங்கள். சென்னையில் பிரமாண்டமான வகையில் கருணாநிதி வைரவிழா கருத்தரங்கம் நடத்தப்படும்.

7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவில் கட்சியின் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இதுபோன்ற விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.