April 19, 2017
சென்னை போலீஸ் 6 மணிக்கு பணிக்கு வர உத்தரவு எனத் தகவல்!
அ.தி.மு.க-வின் உள்கட்சிக் குழப்பத்தால், தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
நேற்று, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
பிறகு, செய்தியாளர்களை அமைச்சர்கள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று கூறினார்.
இதையடுத்து, அடையாறில் இருக்கும் தனது வீட்டில், டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இப்படி, அ.தி.மு.க-வில் உள்கட்சிக் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் கரண் சின்ஹா, சென்னையில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் காலை 6 பணிக்கு பணிக்கு வருமாறு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன
சென்னை போலீஸ் 6 மணிக்கு பணிக்கு வர உத்தரவு எனத் தகவல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 19, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.