Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2017

இளம் ஆசிய சாதனையாளர் ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு: 53 பேருடன் பட்டியலில் இந்தியாவுக்கு 2ம் இடம்


இளம் சாதனையார்களுக்காக ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஓலிம்பிக் வீராங்கனைகள் தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 53 பேர் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டு கௌரவம் அளித்து வருகிறது. புதிதாக 30 வயதுக்குள்பட்ட ஆசிய சாதனையாளர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் ரியோ ஒலிம்பிக்கில் வென்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்ட்டிக்கில் அசத்திய தீபா கர்மாகர் உள்ளிட்ட 53 பேர் இடம்பிடித்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர். பதக்கம் வெள்ளாவிட்டாலும் கோடிக்கணக்காண மக்களின் இதயத்தை வென்றவர் கர்மாகர் என ஃபோர்ப்ஸ் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. பாலிவுட் நடிகை அலியா பட், வெளிநாட்டில் தொழில் மேலான்மை பட்டம் பெற்ற பார்வையற்ற மாணவர் ஸ்ரீகாந்த் போல்லாவும் பட்டியில் அழகு சேர்த்துள்ளனர். பொழுதுபோக்கு, நிதி, முதலீடு, சில்லறை வணிகம், சமூக சிந்தனை உள்பட 10 பிரிவுகளில் மொத்தம் 300 பேர் தேர்வாகியுள்ள பட்டியில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. 76 பேருடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.