April 30, 2017
தினகரனுக்கு 50 கோடி கொடுத்தது யார்? டெல்லி போலீஸ் விசாரணை தீவிரம்! அலறி ஓடும் அமைச்சர்கள்!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த 5 நாட்களாக தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் டெல்லி போலீசார். மேலும் அந்த 50 கோடி ரூபாய் யார் மூலம் கொடுக்கப்பட்டது என்ற கோணத்திலும் விசாரித்தனர்.
அதற்காக சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தினகரனின் மனைவி மற்றும் அவருக்கு உதவிய நண்பர்கள் என விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தினகரனுக்கு பணத்தை மாற்றி கொடுப்பதற்கு உதவிய ஹாவாலா புரோக்கள் நரேஷை டெல்லி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டிடிவி தினகரன் மொத்தமாக பணம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. தற்போது அவரிடம் இருந்து 10 கோடி பணம் அனுப்பியது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் மீதமுள்ள 40 கோடி பணம் தமிழக அமைச்சர்கள் மூலமே டெல்லிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருக்கலாம் என டெல்லி போலீசாருக்கு சந்தேகம் எழும்பியுள்ளது.
எனவே பணம் அனுப்பியதாக சந்தேகப்படும் சில அமைச்சர்களை பிடித்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர்கள் பலர் சென்னையிலிருந்து சொந்த மாவட்டத்திற்கு ஓட்டம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தினகரனுக்கு 50 கோடி கொடுத்தது யார்? டெல்லி போலீஸ் விசாரணை தீவிரம்! அலறி ஓடும் அமைச்சர்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.