Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2017

2 மாணவிகள் திடீர் மாயம்… வலைவீசி தேடும் போலீசார்


நாகர்கோவிலில் காணாமல் போன மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற போது மாயமான இரண்டு மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தக்கலை அருகே அழகிய மண்டபம் பொந்தன்பிலாவிளையை சேர்ந்தவர் டேவிட். இவரது மகள் ஷைலாமோள். இவர் நெய்யூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷைலாமோள் திடீரென மாயமானார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஷைலாமோள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இதையடுத்து டேவிட் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைலாமோளை தேடி வருகிறார்கள்.

இதே போல் தோவாளை மெயின் ரோட்டை சேர்ந்தவர் உஷா. இவரது மகள் முருகேஷ்வரி. இவர் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற முருகேஷ்வரி மாலை வீடு திரும்பவில்லை.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம்..
இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினார்கள். தோழிகளிடமும் விசாரித்தனர். முருகேஷ்வரி கிடைக்காததை அடுத்து அவரது தாயார் உஷா நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்மணி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி முருகேஷ்வரியை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.