Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2017

சின்னத்திற்கு லஞ்சம்.. 2வது நாளாக டெல்லி போலீஸ் முன்பு டிடிவி தினகரன் ஆஜர்


இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டெல்லி போலீஸாரின் உத்தரவை தொடர்ந்து இன்று மதியம் 2 மணியளவில் தினகரன் ஆஜரானார்.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனிடம் இன்றும் விசாரணை வர உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அவர் தற்போது ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை தொடங்கியது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரு அணிகளிடம் விசாரணை நடத்தயிருந்த வேளையில் அந்த சின்னத்தை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தினகரன் குறுக்கு வழியை தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமான சுகேஷ் சந்திரா என்பவர் தனக்கு தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாகவும், தான் நினைத்தால் சசிகலாவையும் வெளியே கொண்டு வரமுடியும் என்றும் புருடா விட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரட்டை இலையை பெற இருவரும் ரூ.60 கோடி வரை பேரம் பேசினர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த டெல்லி குற்றவியல் போலீஸார் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அறையில் இருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் தினகரனுடன் பேரம் நடத்தியது உண்மை என்பன உள்ளிட்ட பல்வேறு தகல்களை சுகேஷ் வாக்குமூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக தினகரன் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று டெல்லி காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தினகரனை சென்னையில் சந்தித்து சம்மன் அளித்தார்.

அதன்படி தினகரன் நேற்று டெல்லி சென்று குற்றவியல் போலீஸாரிடம் 3 மணிக்கு ஆஜரானார். அப்போது 7 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், உதவியாளர் ஜனார்த்தனனிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் தினகரனை இன்று பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இதன் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.