Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

2 நாட்களில் வெள்ளையாகலாம்.. அற்புத வழிகள் இதோ


கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகள் இதோ!

முகத்தின் கருமை நிறத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை வெளியே சென்று வந்தவுடன் செய்தால், நல்ல மாற்றம் கிடைக்கும்.

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதை தினமும் 2 முறை செய்ய வேண்டும்.

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வர வேண்டும்.

மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

குறிப்பு

அழகு குறிப்புகளை பின்பற்றும் போது, கட்டாயம் குறைந்தது 9 டம்ளர் ஒரு நாளைக்கு தண்ணீரை குடிப்பதுடன், இரவு 8 மணிநேரம் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.