April 24, 2017
நாடு முழுவதும் 28 லட்சம் யுனிட் இரத்தம் வீணடிக்கபட்டு உள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் உள்ள ரத்த வங்கிகளில் சுமார் 28 லட்சம் யுனிட் ரத்தம் வீணடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 2.8 மில்லியன் யூனிட்கள் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது. ரத்தம், பிளாஸ்மாக்கள் அல்லத ரத்த தட்டுக்கள் பற்றாக்குறையால் பிரசவத்தின் போதும், விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் ரத்த வங்கிகள் ரத்தத்தை வீணடித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலகள் ரத்தத்தை பாதுகாப்பதில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உயிர் காக்கும் காரணிகளான ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா ஆகியவற்றை காலாவதியாகும் நாளுக்கு முன்னரே இவர்கள் பயன்படுத்துவதில்லை.
2016 - 17 ம் ஆண்டுகளில் மட்டும் 6.57 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான ரத்தம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. அதிகமாக ரத்தம் வீணடிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மோசமான குற்றவாளிகளாக உள்ளன.
மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 28 லட்சம் யுனிட் இரத்தம் வீணடிக்கபட்டு உள்ளது
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.