April 24, 2017
நக்சல்கள் திடீர் தாக்குதல்… 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலி.. சத்தீஷ்கரில் பயங்கரம்!!
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நக்சல்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான சத்தீஷ்கர் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியாகும். அதிலும் புர்காபல் மற்றும் சின்டகுபா ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடங்களில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாகும்.
இந்நிலையில், சுக்மா என்ற பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நக்சல்கள் திடீர் தாக்குதல்… 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலி.. சத்தீஷ்கரில் பயங்கரம்!!
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.