Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2017

சிவப்பு நிற சேலை, மூன்று பெண்கள், 25 வீரர்கள் மரணம்! மருத்துவர் விளக்கம்!


சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் மரணத்திற்கு மர்ம பெண் தான் காரணம் என தகவல் வெளியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட புர்காபல் முகாமை சேர்ந்தவர் மருத்துவ ஊழியர் மனோஜ் குமார். இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், தாக்குதல் நடந்த அன்று சிவப்பு நிற சேலையில் ஒரு பெண்ணை பார்த்ததாகவும், அதனை தொடர்ந்து தான் வீரர்கள் தாக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மனோஜ் குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன். ஆனால், முகாம் அருகே சிவப்பு நிற சேலையில் வந்த அந்த பெண்ணை நான் இதுவரை இங்கு பார்த்ததில்லை.
அன்று, வீரர்கள் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் சுத்தம் செய்யும் பணிக்காக, சென்றிருந்தனர். அவர்கள் சென்ற பிறகு முகாம் அருகே அந்த பெண்ணை நான் பார்த்தேன். பின்னர் சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த இரண்டு பெண்களிடம் கேட்ட போது, அப்பெண் புதிதாக திருமணமாகி கிராமத்திற்கு வந்துள்ளதாக என்னை திசை திருப்பினர்.
பின்னர், கிராமத்தினரிடம் விசாரித்ததில், அப்பெண் இந்த கிராமத்தை சேர்ந்தவர் அல்ல என்று கூறினர். அப்போது, வீரர்கள் மீண்டும் முகாமுக்கு திரும்பும் போது அங்கிருந்த அந்த இரண்டு பெண்கள் தங்கள் கைகளில் இருந்த கம்புகளால் மரத்தில் தட்டி ஒருவித ஒலி எழுப்பினர்.
இந்த ஒலி , மாவோயிஸ்டுகளுக்கு வீரர்கள் வருவது குறித்து சிக்னல் கொடுக்க அவர்களது உளவாளிகள் செய்யும் எச்சரிக்கை என்று அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து, வீரர்கள் முகாமை நெருங்கும் போது, நக்சல்கள் சரமாறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை எதிர்ப்பார்க்காத சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலர் இதில் உயிரிழந்தனர் என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.