April 24, 2017
அவுஸ்திரேலியாவில் இருந்து பால் உற்பத்தியாளர்களுக்காக 20 ஆயிரம் பசுக்கள் இறக்குமதி
தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பால் தரும் பசு மாடுகள் சம்பந்தமான தொழிற்துறையை மேம்படுத்த அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வணிக ரீதியான பால் பண்ணைகளை ஸ்தாபிக்கும் நோக்கில் 20 ஆயிரம் பசு மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை பசு மாடுகள் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் உயர்தர பசு மாடுகள் வணிக ரீதியாக பண்ணைகளை நடந்தும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்கு தேவையான மானிய கடன் வசதிகள் இலங்கை வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளன.
இதனை தவிர நவீன பால் பண்ணைகளை ஏற்படுத்தவும்
அதன் பணிகளை முன்னெடுக்கவும் விலங்கு உணவு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பயனாளிகளுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதுடன் கால்நடை சுகாதார வசதிகளை வழங்க உத்தேசித்துள்ளது.
முதல் கட்டமாக பயனாளிகளான பால் உற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பண்ணைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அவுஸ்திரேலிய நிறுவனமான Wellard நிறுவனம் நியூசிலாந்தில் இருந்து 2 ஆயிரம் பசு மாடுகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து பால் உற்பத்தியாளர்களுக்காக 20 ஆயிரம் பசுக்கள் இறக்குமதி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.