Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2017

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு: ஆகஸ்ட் 6ம் தேதி எழுத்து தேர்வு


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.