April 22, 2017
தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு எதிரொலி: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 16 லட்சம் இயந்திரங்கள் வாங்க முடிவு
தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், 16 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரம் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாகவும், இதனால்தான் உத்தரபிரதேசத்தில் பாஜ வெற்றி பெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் ஓட்டு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும், முறைகேடுகளை யார்வேண்டுமானாலும் நிரூபிக்கலாம் என சவால் விடுத்துள்ளது. மேலும், வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், அரசியல் கட்சிகளின் ஐயத்தை போக்கும் விதத்திலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரங்களை பயன்படுத்துவது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தது. இந்த இயந்திரங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக 16 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.3,174 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இயந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிந்துகொள்ள முடியும். 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு எதிரொலி: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய 16 லட்சம் இயந்திரங்கள் வாங்க முடிவு
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.