Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

மே 14 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் (Consortium of Indian Petroleum Dealers) அழைப்பை ஏற்று, பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், இந்த அறிவிப்பு, வருகிற மே மாதம் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அதன்படி, சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை 24 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் விடுமுறை அளிக்கப்படுவதாக  பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.