Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2017

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கொடூரமாக கற்பழிப்பு........


ஒரிசா மாநிலம், பரிபாதாவில் உள்ள புகழ்பெற்ற  கோவில் புரி ஜெகந்நாதர் கோவில் இந்த கோவிலில்  இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது கோவில் வெறிச்சோடியிருந்த நிலையில் 11 வயது சிறுமி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த குருசரண் பெக்ரா என்ற நபர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து குளத்திற்கு அருகே அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான்.

மோசமான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளியை பிடித்த அப்பகுதி மக்கள் அவனை கொடூரமாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை  புகார் அளித்துள்ள நிலையில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சப்-கலெக்டர் சிறுமியின் சிகிச்சைக்காக அரசாங்கம் சார்பில் 10 ஆயிரம் வழங்கியுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் வகையில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.