April 5, 2017
கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல். 10-வது சீசன் தொடக்க விழா: எமிஜாக்சன் உற்சாக நடனம்
10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. நடிகை எமிஜாக்சன் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியதன் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், 10-வது இந்தியன் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டி ஐதராபாத் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், கங்குலி, லட்சுமணன் ஆகிய 4 பேரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோப்பையுடன் மைதானத்தில் வலம் வந்தார். நடிகை எமிஜாக்சன உற்சாகமாக நடனமாடினார். அப்போது, புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இன்று தொடங்கும் ஐ.பி.எல். போட்டி மே மாதம் 21-ந்தேதி வரை 41 நாட்கள் நடக்கிறது. 8 அணிகள் விளையாடும் இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல். 10-வது சீசன் தொடக்க விழா: எமிஜாக்சன் உற்சாக நடனம்
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.