Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 29, 2017

100 எம்பி பிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!


தற்போது ரிலையன்ஸ் ஜியோ பைபர் (எப்டிடிஇ) முன்னோட்டம் கூடிய விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பைபர் (எப்டிடிஇ) என்ற அகல அலைவரிசை சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பைபர் முன்னோட்டம்:
இந்த ஜியோ பைபர்(எப்டிடிஇ) முன்னோட்டம் வரவிருக்கும் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்.


பிராட்பேண்ட்:
பைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப்படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.


வலைதளம்:
தற்போது ஜியோ பைபர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.


இணையப் பயனர்கள்:
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் 2 ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்புகளைபப் பயன்படுத்துகின்றனர். மேலும் கம்பி இணைப்புகளில் எசிடி மற்றும் ஐஎஸ்பி-களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.


ஜியோ பைபர் தாக்கம்:
ஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிடத்தில் உள்ளது. மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரியஅளிவற்க்கு வேகம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.