Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2017

நடிகர் கமலஹாசன் மீது வழக்கு இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம் குடந்தை கோர்ட் உத்தரவு


நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் மகாபாரதத்தை பற்றி மிகவும் இழிவாக பேசியதாக நடிகர் கமலஹாசன் மீது இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாலா கடந்த 24ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 27ம் தேதி ஏற்று கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நீதிபதி சரவணபவ விசாரணை நடத்தி மனுதாக்கல் செய்தவர் சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற மனுக்களை அவ்வப்போது தாக்கல் செய்கிறார். ஏற்கனவே நடிகை குஷ்பு மீது மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் எவ்வித முகாந்திரம் இல்லையென கூறி தள்ளுபடி செய்தார்.மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக கூறி பாலாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அந்த அபராத தொகையை சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு என துவங்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு அதற்குரிய ரசீதை ஒரு வாரத்துக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டுமென நீதிபதி சரவணபவ உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.