March 2, 2017
Pepsi, Coke தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உயர் நீதிமன்றம்
இதை கேட்டவுடன் நமக்கு ரத்தம் கொதிக்கும். அப்படியே போன் எடுத்து பார்த்தால் அங்கு தமிழா தமிழா தாமிரபரணியை பெப்சி கோக் ஆகிய அந்நிய நாட்டு சதியில் இருந்து மீட்க வீறு கொண்டு எழுந்து வா என்று 45 மெசேஜ் வந்திருக்கும். ஏற்கனவே கொத்தித்த ரத்தம் மேலும் கொதிநிலைக்கு போய் மண்டையில் ஏறி வெடிக்கும் நிலைக்கு சென்றுவிடும். கொதிக்கிற ரத்தத்தை கொஞ்சம் தண்ணி ஊத்தி அணைச்சுட்டு பொறுமையாக படியுங்கள்.
தாமிரபரணி நீரை பெப்சி கோக் மட்டும் தான் எடுக்கிறார்களோ?
இவர்களை விட அதிகமாக யார் நீரை உறிஞ்சுவது?
மொத்தம் எத்தனை பேர் இந்த நீரை பயன்படுத்துகிறார்கள்?
அட இவர்களுக்கு இந்த நீரை குத்தகைக்கு விடுவது யார்?
இந்த கேள்விகள் எதற்கும் அந்த வாட்சப் செய்திகளில் பதில் இருக்காது.
தாமிரபரணியில் நீர் எடுப்பது அரசு நிறுவனமான சிப்காட்.
ஒரு நாளைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு - 136 லட்சம் லிட்டர்.
இந்த நீரை சிப்காட் 27 கம்பெனிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. அந்த பட்டியலில் இரண்டு கம்பெனிகள் தான் பெப்சி மற்றும் கோக். ஆகவே இந்த தடையால் இது வரை தாமிரபரணி ஆற்று தண்ணீரை யாருமே எடுக்காமல் தற்பொழுது தடை நீங்கியதால் தான் எடுக்க போகிறார்கள் என்பது பொய். பெப்சி கோக் தவிர ஏனைய 25 நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனமான சிப்காட் தொடர்ந்து நீர் வழங்கிக்கொண்டு தான் இருக்கிறது.
சரி, சிப்காட் யாருக்கு அதிக நீரை கொடுத்துள்ளது?
பெப்சி ... இல்லை
கோக் ... இல்லை.
அட அப்போ யாரு?
2015 - 2016 வருட கணக்குப்படி அதிகமான தாமிரபரணி நீரை உபயோகப்படுத்தியது ATC Tyres என்ற நிறுவனம் தான். இவர்கள் பயன்படுத்திய நீர் பெப்சி கோக் இரண்டும் சேர்த்து பயன்படுத்திய நீரை விட அதிகம். இவர்கள் ஒரு நாளைக்கு 9.3 லட்சம் லிட்டர் நீரை பயன்படுத்தியுள்ளார்கள்.
பெப்சி ஒரு நாளைக்கு 1.1 லட்சம் லிட்டர் நீரும்,
கோக் ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் நீரும் பயன்படுத்தியுள்ளன.
Ramco, Wolkem, Cal Mic, Globe Radio, Nova Carbons. VLS Enterprises, Bhuvi Care மற்றும் Pabros Spices ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை விட அதிகமாக பயன்படுத்தியுள்ளன.
ஆக நமது போராட்டம் தாமிரபரணி நீரை பங்கு பிரிக்கும் அரசு நிறுவனமான சிப்காட்டுக்கு எதிராக இருந்தால் தாமிரபரணி ஆற்றை நிரந்தரமாக காப்பாற்றலாம். உடனே நீ பெப்சி கோக் நிறுவனங்களிடம் காசு வாங்கி விட்டாய் என்று ஒரு முட்டாள் கும்பல் அலறிக்கொண்டு வரும். மூளையை அடகு வைத்த அந்த கும்பலுக்கு பதில் சொல்வது நேர விரயம் தான். உண்மை விவரங்களை மக்களுக்கு எடுத்துரைப்பது தான் பதிவின் நோக்கம்.
பெப்சி, கோக் மற்றும் டாஸ்மாக் சாராயம் ஆகியவை உடல் நலத்துக்கு கேடு. அதை குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.
Pepsi, Coke தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உயர் நீதிமன்றம்
Reviewed by Admin
on
March 02, 2017
Rating: 5
Reviewed by Admin
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.