March 28, 2017
நாகையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் திருவேங்கடம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் திருவேங்கடம் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மணிகண்டன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்துள்ளனர். அதன் பேரில் தலைமை ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது
Reviewed by மறத்தமிழன்
on
March 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.