Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

நாஞ்சில் சம்பத் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா? பாத்திமா பாபு பதிலடி!


பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மிகவும் நாகரீகமான கருத்துக்களை கவனமாக உதிர்க்க வேண்டும்.
அப்படி இல்லையெனில் எதிர் தரப்பிலிருந்து வரும் தாக்குதல் அதை விட மோசமாக இருக்கும்.
அப்படி ஒரு கருத்தை உதிர்த்து விட்டுதான், நாஞ்சில் சம்பத் இன்று வலைதளங்களில் வகை வகையாக வாங்கி கட்டிக்க கொண்டிருக்கிறார்.
நடிகை லதா, செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு ஆகியோர் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், அவர்களை நக்கல் செய்யும் விதத்தில் பத்தினி தெய்வங்கள் என்று கேவலமாக கூறி இருந்தார்.
இதையடுத்து வலைத்தளங்களில் அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில். பாத்திமா பாபு, தமது டுவிட்டர் பக்கத்தில் நாஞ்சில் சம்பத்திற்கு பதில் கூறியுள்ளார்.
அதில், “சம்பத் அவர்களே…உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்…நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள்.
உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி உங்களுக்கு மிகப் பொருத்தம் என ஐயம் திரிபற நிரூபித்துவிட்டீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைவிட நாஞ்சில் சம்பத்தை எப்படி கேவல படுத்த முடியும்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.