March 10, 2017
சிவனோவைக் கண்டித்து கொச்சியில் முத்த போராட்டம்..! அசத்திய காதலா்கள்..!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது மரைன்டிரைவ். இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவார்கள்.
காதலர்களுக்கு இந்த இடம்தான் புகழிடம். நேற்று சிவசேனா கட்சி தலைவா் தேவன் உள்ளிட்ட 10 பேர் கையில் கம்புடன் அந்த பகுதிக்கு வந்து அங்கு இருந்த காதலா்களை அடித்து விரட்டினா். அப்போது அந்த பகுதியில் எர்ணாகுளம் மத்திய போலீசாரும் இருந்துள்ளனா். இந்த சம்பவத்தை அவா்கள் கண்டுக் கொள்ளவில்லை.
இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனா். இது குறித்து விசாரணை நடத்த கேரள டிஜிபி லேக்நாத்பெஹ்ரா உத்தரவிட்டார். அதன்படி விசாரணையில் எர்ணாகுளம் மத்திய சப்-இன்ஸ்பெக்டா் விஜயசங்கா் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்த 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.
சிவசோனாவின் நடவடிக்கையைக் கண்டித்து கிஸ் ஆப் லவ் அமைப்பினா் முத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா். கடந்த 2 வருடங்களுக்கு முன்னா் கிஸ் ஆப் லவ் அமைப்பினா் இதே போன்ற இன்னொரு விவகாரத்தில் முத்த போராட்டம் நடத்தினா். அப்போது போலீசாருக்கும் காதலா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் காதலா்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் முத்த போராட்டமானது வீதி நாடகமாக மாறி, 100க்கும் மேற்பட்ட காதலா்கள் சிவசேனாவுக்கு வீதி நாடகம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனா்.
சிவனோவைக் கண்டித்து கொச்சியில் முத்த போராட்டம்..! அசத்திய காதலா்கள்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.