March 8, 2017
'அம்மா போல இல்ல சின்னம்மா..!' - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு
ஜெயலலிதா இருந்தவரை ஆட்சிப்பிரச்னை மட்டும்தான். அவரது காலத்துக்குப்பிறகு இப்போது அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாந்த முகத்துடன் ஓ.பி.எஸ் கொடுத்துவரும் குடைச்சல், அ.தி.மு.க-வின் அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பாடாய்ப்படுத்துகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தாலும் மோடியின் நிஜ முகம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது ஆளும் அரசு. ஆட்சி அமைக்க அழைக்கும் சட்டப்படியான சம்பிரதாயத்துக்கே அத்தனை விறைப்பு காட்டியவர்கள் இனிவரும் நாட்களில், தங்களை அரசுக் கார்களில் பவனி வர அனுமதிப்பார்களா என்ற ஐயம் அவர்கள் மனதில் வலுவாக உள்ளது.
மத்திய அரசின் விறைப்பு ஒரு பக்கம் என்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை கிளப்பும் எதிர்க்கட்சிகள், சிடு சிடு முகம் காட்டும் உள்ளுர் பி.ஜே.பி, சிறை சென்றுவிட்ட சின்னம்மா, தினகரனை மிரட்டும் அந்நிய செலாவணி... என நாலாதிசைகளில் இருந்தும் வரும் தாக்குதல்களுக்கு நடுவே ஒவ்வொருநாளும் அரசை நடத்துவது என்பது அந்தரத்தில் நடக்கும் சாகசமாகத்தான் இருக்கிறது.
இத்தனைக்கும் தீர்வாகவே நேற்று (07-03-2017) காஞ்சி சங்கர மடத்தில், டி.டி.வி தினகரன் - சங்கராச்சாரியார் சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள். அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு, அ.தி.மு.க கொடியோ வேறு எந்த அடையாளங்களோ இல்லாமல் தனது காரில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் காஞ்சி சங்கர மடத்துக்குக் சென்றார். கட்சியின் மாவட்ட பிரமுகர்களுக்குக்கூட இவ்விஷயம் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. வாசலில் இருந்து அவரை மடத்தின் ஸ்ரீகாரியம் பவ்யமாக ஜெயேந்திரரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஜெயேந்திரருடன் எப்போதும் இருக்கும் உதவியாளர்கள்கூட இந்தச் சந்திப்பின்போது வெளியே அனுப்பப்பட்டனர். 24 மணிநேரமும் அவருடன் இருப்பதற்காக பணிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்ற மருத்துவர் மட்டுமே உடன் இருந்தார். அவரும் சற்றுத் தள்ளியே அமரவைக்கப்பட்டார். சுமார் 2 மணி நேரம் நிகழ்ந்த இந்தச் சந்திப்பின் முதல் 40 நிமிடங்கள் ஜெயேந்திரருடன், டி.டி.வி தினகரன் நீண்ட ஆலோசனை செய்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த அறைக்கு விஜயேந்திரர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு அவர்களிடையே நடந்த உரையாடல் சுமார் ஒரு மணிநேரத்தைத் தாண்டி நீண்டது என்கிறார்கள்.
சந்திப்பு முடிந்து 1.40 மணிக்கு அங்கிருந்து சத்தமின்றி வெளியேறினார் டி.டி.வி தினகரன். மடத்துக்குள் வரும்போது ஒருவித இறுக்கமான மனநிலையுடன் வந்த தினகரன் வெளியேறும்போது உற்சாகக் களையுடன் புறப்பட்டுச் சென்றாராம். வெளியுலகம் தெரியாமல் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு குறித்து சங்கராச்சாரியாருக்கு நெருக்கமானவர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் கைது செய்தது அப்போதைய அ.தி.மு.க அரசு! மத்தியிலும் மாநிலத்திலும் செல்வாக்கோடு திகழ்ந்த சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மடாதிபதிகளுக்கு எதிராகத் துணிந்து நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்குப்பின் சங்கரமடத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏழாம்பொருத்தமாகிப்போனது. கடந்த காலங்களில், காஞ்சி சங்கரமடத்துக்கும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கும் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். அப்படியொரு சூழ்நிலையிலும் சங்கராச்சாரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. இதனிடையே சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து மாடாதிபகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க-வுடன் விரோதம் பாராட்டாமல் மடத்திலேயே முடங்கிக்கிடந்தார் ஜெயேந்திரர்.
போயஸ் தோட்டத்துக்கும் மடத்துக்குமான இந்த பூசல் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு ஒரு முடிவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 09.02.2017 அன்று நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கோவில் நிர்வாக அதிகாரி நாராயணன் மற்றும் கார்த்திக் சாஸ்திரி, வினோத் குமார் ஆகியோர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துக் கொடுத்தனர். அரசியல் நெருக்கடியில் இருந்த சசிகலாவுக்கு இந்த சமிக்ஞை கொஞ்சம் தெம்பு தந்ததாம்.
ஓ.பி.எஸ் அணியினரின் தாக்குதல், பி.ஜே.பி-யின் பாராமுகம், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதாவின் மரணத்தில் எழுப்பப்படும் சர்ச்சை... என இப்போது பெரும் சங்கடத்தில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக்கு சர்வரோக நிவாரணியாக இருப்பது சங்கரமடத்தின் இந்த அழைப்புதான். எனவேதான் இப்படி ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டது என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்கான இந்த சந்திப்பு வெளியே தெரியக்கூடாது என்பதால், இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட்டது என்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது டி.டி.வி தினகரன், ''கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்... அம்மா ஏதோ ஓர் கோபத்தில், உங்கள் மீது எதிர்ப்பு காட்டிவிட்டார். அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. சின்னம்மா அப்படியல்ல... அந்த சம்பவங்களின்போது எத்தனையோ முறை அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினார். சிறைக்கு சென்றிருக்காவிட்டால், இந்நேரம் சின்னம்மாதான் நேரில் வந்து நடந்த விஷயங்களுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார்" என்றதும் நெகிழ்ந்துபோனாராம் ஜெயேந்திரர். ''முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். இப்போது நடப்பது உங்களின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி என்றே வைத்துக்கொள்ளுங்கள்" என டி.டி.வி சொன்னபோது அர்த்தபுஷ்டியோடு சிரித்தாராம் ஜெயேந்திரர்.
இந்தச் சந்திப்பின்போது டி.டி.வி தினகரன் தரப்பிலிருந்து நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாம். 'சின்னம்மாவை பொதுச் செயலாளரா
'அம்மா போல இல்ல சின்னம்மா..!' - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.