March 14, 2017
தற்கொலைக்கு முன்னர் முகநூலில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் என்ன கூறியிருந்தார்?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு முன்னர் முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு முன்னர் முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டவர் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் முனிர்க்காவில் உள்ள தனது நண்பனின் அறைக்கு ஹோலி கொண்டாட சென்றார்.
பின்னர் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி முத்துக்கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் சமத்துவமில்லை என்றும் ஆய்வு மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதில்ப திவிட்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்னர் முகநூலில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் என்ன கூறியிருந்தார்?
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.