March 15, 2017
தைரியமாக களத்தில் குதித்தார் டி.டி.வி.தினகரன் - ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
அதிமுக சசிகலா அணி சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்ட்டுவிட்டார். அக்கட்சியின் அவை தலைவரான செங்கோட்டையன், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
காலை 9 மணிக்கு அதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூட்டம், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன் உள்பட ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசித்தனர்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி சசிகலாவின் அக்கா மகனும், அதிமுகவின் புதிய துணை பொது செயலாளருமான டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டார்.
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் அல்லது ஆதிராஜாராம் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், எதை பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக களத்தில் குதித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.ஆர்.கே. நகரை பொறுத்தவரை, ஜெயலலிதாகவுக்கு மிகுந்த செல்வாக்கு கொண்ட தொகுதியாகும். அங்கு தற்போது, சசிகலா குடும்பத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தினகரன் களத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
தைரியமாக களத்தில் குதித்தார் டி.டி.வி.தினகரன் - ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.