குளத்தை சுத்தப்படுத்தும் பணியை, கையில் எடுத்த இளைஞா்கள்! அசத்துறாங்கப்பா..!
ராமநாதரபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு ஊராட்சி பெரிய ஊரணியில் தாமரை, அல்லிச்செடிகளின் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி போன்றவை ஏற்பட்டது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணாங்குண்டு பெரிய ஊரணியில் நேற்று காலை 8 மணிக்கு 90 இளைஞர்கள் ஒன்றிணைந்தனர்.
...

கைகளில் முள்ளு கரண்டி, மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் சகிதம் துப்புறவுப்பணியில் ஈடுபட்டு, ஊரணியை ஆக்கிரமித்திருந்த தாமரை, அல்லிச்செடிகளை குழுக்களாக சென்று அகற்றினர்.
இளைஞர் சங்க தலைவர் அர்ஷத் அலி23), கூறுகையில், ‘எங்கள் இளைஞர் சங்கத்தில் 120 பேர் உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் படித்து வருகிறோம். விடுமுறை நாட்களில் ஒன்று கூடி பொது விஷயங்கள் குறித்து விவாதித்தும், அதற்கு தீர்வு காண்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.
தற்போது கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்ட நிலையில் குளிப்பதற்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஊரணியை துார் வாரி செடி, கொடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பல முறை ஊராட்சி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டோம்.
இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், இளைஞர்களாகிய நாங்களே களம் இறங்கி துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதுவரை மூன்று முறை இவ்வாறு அகற்றினாலும், மீண்டும், தாமரை, அல்லி செடிகள் வளர்வது மட்டும் நிற்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றி ஊரணியை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இந்த இளைஞா்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, கிராமமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும், குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.