Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

மோடியின் பிரச்சாரத்தில் பின்னடைவு!


பீகார் தேர்தலில் மாட்டையும், மதத்தையும் மய்யமாக வைத்துப் பிரச்சாரம் செய்த மோடி, அந்தப் பிரச்சாரம் உத்தரப்பிரதேசத்தில் எடுபடாது என்பதை அறிந்துகொண்டு, தனது தாயாரை மய்யப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே நாடே வங்கி வாசலில் நின்றுகொண்டிருந்தபோது மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை சமாளிக்க தனது தாயாரை வங்கி வாசலில் நிற்க வைத்தார். இந்த நிகழ்வும் அன்று மக்களிடையே பெரும் கோபத்தை வரவழைத்தது. தற்போது உத்தரப்பிரதேச தேர்தல் மோடிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வரப்போகும் பொதுத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால், மோடி தன்னுடைய பதவியின் மேன்மையைப் புறந்தள்ளி ஜாதி ரீதியாக, மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் விதமாகப் பேசி வருகிறார். சென்ற வாரம் மெயின்புரி பகுதியில் பேசிய மோடி இஸ்லாமியர்களுக்கு எல்லா ஊர்களிலும் கல்லறைகள் உள்ளன; இந்துக்களுக்கு இல்லை என்று மதவாதம் பேசினார்.

இன்னும் பல கட்ட தேர்தல்கள் மீதமிருக்கும் நிலையில், மோடி புதுவிதமக உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். பதேபூர் நகரில் பேசிய மோடி, “எனது அம்மா இன்றும் விறகடுப்பில்தான் சாப்பாடு செய்கிறார்கள். அவர் கள் கண்களில் கண்ணீர் வருவதைக் கண்டு நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அதே நிலை உங்களுக் கும் இருக்கும் என்ற வலி எனக்குத் தெரியும்‘’ என்று பேசினார்.

இதற்குப் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரி வித்த வண்ணம் உள்ளனர்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஒருவர் அரசியல் செய்வதற்காக தன்னுடைய 90 வயது தாயாரைக்கூட பொதுவில் கொண்டு வந்து பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மையில்  தனது அன்னையின்மீது அக்கறை இருந்தால், மனைவிமீது அக்கறை இருந்தால் அவர்களை டில்லியில் தனது இல்லத்தில் அழைத்துக் கொண்டு வந்து கூடவே வைத்துக் கவனிக்கலாமே’’ என்றார்.

விகாஷ் என்பவர் சமூக வலைதளத்தில் எழுதிய தாவது:

‘‘வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிக்கொண்டு தற் போது சுடுகாடுவரை சென்று விட்டார். இனி எங்கே செல்வாரோ’’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் தன்னுடைய 90 வயது அன்னையைக்கூட பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகிறார். திடீரென்று, தான்உத்தரப்பிரதேசத்தின்தத்துப்பிள்ளைஎன் கிறார். அவர்கள் தாயாருக்கும் குழப்பம், உத்தரப் பிரதேசத்தில் வாழும் பெண்களுக்கும் குழப்பம்‘’ என்று பதியவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் மோடி தோல்வியைச் சந்திக்கும் நிலைக்குச் சென்று விட்டால், அவர் எதுவும் செய்யத் துணிவார் என் பதற்கு தனது அன்னையை மய்யமாக வைத்தே பிரச்சாரம் செய்கிறார் என்பது ஒரு துளி சான்றுதான் என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசமுதலமைச்சர்அகிலேஷ்ஆட்சி யில், தீபாவளிக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்கு வதில்லை; ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸ்ஸிற்கும் தடை யில்லா மின்சாரம் வழங்குகிறார்கள் என்று ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால், அவரின் பார்வையும், குணமும் எந்தத் தண்டவாளத்தில் பயணிக்கிறது என்பதை எளிதில் அறியலாம்.

எதிலும் மதப் பார்வை என்பது ஆபத்தானது. அதுவும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்குத் தலைமை வகிக்கக் கூடியவர் அதற்கு எதிரான திசையில் பயணிப்பது - அந்தப் பதவிக்குரிய தக்கார் இவர் இல்லை என்பதற்கான அடையாளமே!

மதச்சார்பின்மை என்பது ஒரு தேசத்துரோகம் என்பது கோல்வால்கரின் கருத்து. அதனால்தான் ‘குடியரசு’ தினத்துக்காக அரசு வெளியிட்ட விளம் பரத்தில்கூட செக்குலர் (மதச்சார்பின்மை) என்ற சொல் நீக்கப்படுகிறது.

நாடு நாசகால திசையில் பா.ஜ.க. தலைமையிலான அரசால் வேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது.

வெகுமக்களின் ஒற்றுமையான ஜனநாயகக் குரல் வலிமை பெற்று இத்தீய சக்திகளைத் துடைத்தெறிய வீறுகொண்டு எழவேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.