March 7, 2017
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1ம் தேதி சென்னை தங்கசாலையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக கருத்து தெரிவித்த ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான மனுவில், நடிகர் ராதாரவி ஏதேனும் ஒரு மாற்றுத்திறனாளி வீட்டில் ஓராண்டு தங்கி சேவை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.