Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

ஆதி யோகி சிலை அகற்றப்படும் : விளைநிலங்கள் மீட்கப்படும், மாணவர்கள் கையில் ?


கம்யூனிஸ்டுகள் சமூக ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கடந்த 24-ம் தேதி கோவை மாவட்டம்  வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கு சென்னை  உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.
அப்போது  தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கோவை ஈஷா மையத்தில் விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான அபராதத் தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.
ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆதியோகி சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய ஈஷாவிடம் கேட்டுள்ளோம்.  மதவழிபாட்டைக் கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற கோவை ஆட்சியர் அனுமதியளித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஈஷா யோக மையம் விதிமுறைகளை மீறியிருக்கிறது.
பிரதமர் அங்கே செல்ல வேண்டாம் எனக்கூற ஆளும் கட்சிக்கு அருகதை இல்லை, அப்படி கூறி மீறி பிரதமர் போயிருப்பாரா? என்ற குரலும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில் நெடுவாசல் போராட்டம் முடிந்து இந்தப் பிரச்சனையை மாணவர்கள், இளைஞர்கள் கையில் எடுக்கவேண்டும் என்று மே 17இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே ஆதியோகி சிலையை அகற்றி ஆக்ரமிப்பு செய்யப்பட்ட வன இடத்தை மீண்டும் பெற முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.