Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

மரியாதையா வண்டிய நிறுத்து.! தோனியை மிரட்டிய இளம் பெண்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் விலை உயர்ந்த ஹம்மர் காரை வழிமறித்த இளம் பெண் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தோனி சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாக முன்வந்து விலகிகொண்டாலும் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு விமானம் மூலம் ராஞ்சி திரும்பிய தோனி அங்கு பார்கிங்கில் நின்றிருந்த அவரது ஃபேவரைட்  காரான ஹம்மர் காரை எடுத்து கொண்டு விட்டிற்கு கிளம்பியுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் தோனியின் காரை வழிமறித்த இளம்பெண் ஒருவர்  “என்கூட செல்ஃபி எடுத்துட்டுப் போங்க; இல்லேனா நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்” என்று வற்புறுத்தியுள்ளார், ‘‘தயவுசெஞ்சு வழி விடுங்க..’’ என்று தோனி எவ்வளவோ கெஞ்சியும், ரசிகை கேட்கும் மூடில் இல்லை. உடனடியாக செக்யூரிட்டிகள் வந்து அந்த ரசிகையை அப்புறப்படுத்த முயன்றதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுல் அந்த ரசிகையின் கைப்பை கீழே விழ, அதன் மீது தனது ஹம்மர் டயர்களை ஏற்றி இறக்கிச் சென்றது அந்த இடத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி விட்டது.

அப்போது காரில் இருந்து கூலாக வெளியே எட்டிப்பார்த்த தோனி பத்திரிக்கையாளர்களை பார்த்து ஒரு பிரச்சனையும் இல்ல என்பது போல் கை அசைத்துவிட்டு சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.