Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 27, 2017

உ.பி முதல்வர் உத்தரவின் எதிரொலி... விலங்கியல் பூங்காவில் உணவில்லாமல் தவிக்கும் மிருகங்கள்!


உத்தரப்பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர் பா.ஜ.க தலைமையிலான அரசு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் 15 நாள்களுக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும், ராமாயண அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு, அனுமதியின்று செயல்பட்டு வரும் இறைச்சி வெட்டும் ஆலைகள் மூடல் என்று பல அதிரடி அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

இதில் குறிப்பாக, இறைச்சி வெட்டும் ஆலைகளின் மூடல் உத்தரவால் உயிரியல் பூங்காக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கான்பூர் உயிரியில் பூங்காவில் மட்டும் 70 மிருகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் மிருகங்களுக்குப் போதுமான அளவு இறைச்சி இல்லாததால், அவற்றை ஒரு தற்காலிக டயட்டில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த நான்கு பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.