March 3, 2017
இளம் பெண்பிள்ளைகளுக்கு போதை மருந்தூட்டி ஏரியில் தூக்கியெறிந்த பெற்றோர்!
ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருப்பதாகக் சந்தேகித்த தம்பதியர், தமது பதின்ம வயதுப் பெண் பிள்ளைகளுக்கு போதை மருந்து ஊட்டி ஏரியில் தள்ளிய சம்பவம் லூதியானாவில் இடம்பெற்றுள்ளது.
பதினைந்து வயதே நிரம்பிய இவ்விரு சகோதரிகளும் நேற்று முன்தினம் திங்களன்று இரவு தாமதமாக வீடு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே இவர்களது நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த இவர்களது பெற்றோருக்கு இது மிகுந்த அதிர்ச்சியளிக்கவே, உணவில் போதை மருந்தைக் கலந்து உண்ணக் கொடுத்தனர்.
உணவு உண்ட சிறிது நேரத்தில் மயக்கமுற்ற தமது பிள்ளைகளைத் தூக்கிச் சென்ற பெற்றோர், அங்கிருந்த ஒரு ஏரியில் வீசிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் காலை ஏரியில் இரண்டு இளம் சிறுமிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பொலிஸார், இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் ஜோதி என்ற சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.
உயிர் தப்பிய பெண்ணிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தன் பெற்றோரைச் சிக்கவைக்க விரும்பாத அவர், தான் ஒரு அனாதை என்றும், கோயில் வாசலில் பிச்சையெடுப்பதாகவும், ஒருவர் கொடுத்த உணவை உண்டதால் தனக்கு மயக்கம் ஏற்பட்டு ஏரியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ச்சியான விசாரணைகளின் பின் நடந்த உண்மைகள் அனைத்தும் அம்பலமாகின. சிறுமியரின் பெற்றோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இளம் பெண்பிள்ளைகளுக்கு போதை மருந்தூட்டி ஏரியில் தூக்கியெறிந்த பெற்றோர்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.