Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 16, 2017

பங்காரு அடிகளாரின் மகனால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவர் விஜய்?


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த விஜய் என்ற மாணவர் கல்லூரி தாளாளரும், பங்காரு அடிகளாரின் மகனுமான செந்தில்குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரி குறித்து பேஸ்புக்கில் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவர் விஜய்க்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததாக கூறி, அவரது உறவினர்கள் பயிற்சியிலிருந்த மருத்துவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள மற்ற நோயாளிகளும் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.

இதனிடையே, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாணவனின் தாயார் அளித்துள்ள புகாரை விசாரணை செய்த அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் வேறு யாருமல்ல, பங்காரு அடிகளாரின் மகன்தான் இந்த செந்தில்குமார். இந்தக ்கல்லூரி நிர்வாகமும், பங்காரு அடிகளாரின் குடும்பமும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.