Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2017

படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி


தேர்தல் காலங்கள் அல்லது பெரும்பாலும் அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில் மட்டும் ரஜினி வாய்ஸ் கொடுப்பது ஏன்? எல்லா பிரச்சினைகளுக்கும் வாய்ஸ் கொடுக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமண

மக்கள் போராட்டங்களின்போது மட்டும் ரஜினி வாய்ஸ் எங்கே போகிறது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் போட்டியிடும், கங்கை அமரன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், தான் எந்த கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு கொடுக்கப்போவதில்லை என்று ரஜினி டிவிட்டரில் கூறியிருந்தார்.

ரஜினியின் வாய்ஸ் இப்போதெல்லாம் எடுபடுவதில்லை என நெட்டிசன்களும் அவரை ஓட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ரஜினி பற்றி டிவிட்டரில் இன்று விளாசித் தள்ளியுள்ளார்.




மண்டை ஓடுகள்
தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளோடு டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.எது தடுக்கிறது?

லைக்கா சர்ச்சை
நடிகராக மட்டுமில்லை. இலங்கைதமிழர் வரை அதுவும் லைக்கா (பின்னிருக்கும் பிஜேபி) ஆதரவோடு அரசியல் விளம்பரம் தேடினால் இக்கேள்வி எழவே செய்யும்.

மக்கள் போராட்டத்தின்போது
அரசியலில் ஈடுபடாத வேறு எந்த நடிகரும் தேர்தல்நேரத்தில் 'வாய்ஸ்' கொடுப்பதில்லை.மக்கள் போராட்டங்களின்போது மட்டும் அந்த 'வாய்ஸ் எங்கே?

படம் ரிலீஸ் காலங்கள்
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள ஜோதிமணி, தேர்தல் காலங்கள் அல்லது பெரும்பாலும் அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில் மட்டும் ரஜினி வாய்ஸ் கொடுப்பது ஏன்? எல்லா பிரச்சினைகளுக்கும் வாய்ஸ் கொடுக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி.

மோடிக்கு பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு உத்தரவு வெளியான தினத்தில், புதிய இந்தியா பிறந்துள்ளது என்று, ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அப்போது தாக்கம் ஏற்படுத்தியது. இதனால் காங்கிரசில் பல தலைவர்கள் ரஜினிகாந்த் மீது அதிருப்தியிலுள்ளதாக கூறப்படும் பின்னணியில் ஜோதிமணியின் தாக்குதல் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.