Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

புது அவதாரம் சுமந்த் சி ராமன்..


இவரை வெறும் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் இவர் பன்முகம் கொண்டவர்.. அதில் ஒரு முகம் இவர் டாடா மென்பொருள் நிறுவனமான TCS நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அப்படி என்ன படிச்சுருக்கார் என்று தானே பார்க்கிறீர்கள் இவர் ஒரு மருத்துவர். TCS நிறுவனத்தின் மருத்துவம் சார்ந்த மென்பொருள் உருவாக்கத்தில் ஆலோசகராக பணி புரிகிறார்.

இந்த டாடா மென்பொருள் நிறுவனத்தின் மிக முக்கிய மருத்துவ சேவை பிரிவு என்னவென்றால் Clinical Trails. இதில் என்ன செய்வார்கள் என்றால் ஒரு மருந்தை தயாரிக்கும் முன்பு அது குறித்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். எலி மற்றும் குரங்கின் மீது சோதித்து பரிசோதித்தது எல்லாம் அந்த காலம் இப்பொழுது நவீன உலகு அல்லவா..

அதனால் மனிதர்கள் மீதே பரிசோதிக்கிறார்கள். இந்த பரிசோதனை உலக அளவில் நடந்து கொண்டுள்ளது அந்த பரிசோதனை பிரிவும் டாடா நிறுவனம் வைத்துள்ளது. மனிதர்களை எலிகளாக பாவித்து பரிசோதனைக்கு பயன்படுத்தும் டாடா நிறுவனத்தின் மருத்துவ பிரிவில் வேலை செய்து கொண்டு இவர் சமூக ஆர்வலர் என்று உலா வருகிறார்.

இவர் எந்த சமூகத்தின் ஆர்வலர் எனபது  தான் புரியாத புதிராக உள்ளது.. ஒரு வேலை எலிகளை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது வாயில்லா ஜீவன் என்று மனிதர் மீது பரிசோதிக்கும்

"எலிகள் சமூக ஆர்வலரோ..."

2013ஆம் ஆண்டு உயர்நீதி மன்றம் சில தடைகளை விதித்தது இத்தகைய பரிசோதனை மீது ஆனால் 2016 மார்ச்சில் மத்திய அரசு புது சட்டம் மூலமாக தடைகளை தளர்த்தியுள்ளது.. வாழ்க ஜனநாயகம்..

இதன் கீழாக தான் நெடுவாசல் பிரச்சனையை பேசும் விவாதங்களில் இவர் தனது கார்ப்ரேட் குறுக்கு புத்தியுடன் மண்ணெண்ணெய் எடுத்தால் அனுமதிப்பீர்களா என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டுள்ளார். வேறு ஒரு காரணமும் இல்லை டாடா நிறுவனத்தின் 50 சதவீத முதலீட்டில் Teil Projects LTD என்ற ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனங்களுக்கு தேவையான கட்டுமானங்களை கட்டிக் கொடுக்கும்  நிறுவனமும் இருக்கிறது..

ஒரு பொருளாதார அடியாள்.. சுமந்த் சி ராமன்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.